yazhu - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  yazhu
இடம்:  nellai
பிறந்த தேதி :  17-Dec-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Feb-2013
பார்த்தவர்கள்:  267
புள்ளி:  14

என்னைப் பற்றி...

படித்தது பொறியியல்,,,பிடித்தது தமிழியல்,,,இங்கே கலந்தது வாசிக்கவும் .....இன்னும் வார்த்தைகளை அதிகமாய் நேசிக்கவும்.

என் படைப்புகள்
yazhu செய்திகள்
yazhu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2019 1:16 am

விறகூட்டி அடுப்பெடுத்துக் கொஞ்சம் புகை புசித்து,
எங்கள் பசி நீக்க சுடு சோறாக்கி அம்மா கொஞ்சம் நகர,

காத்திருந்த கொக்காய்,
குலாவிக் களித்திருக்கும் அவ்வன்பர்களை கொஞ்சம் பதவினையில் பிரித்து,
அந்த அக்னி தேவனின் சினந்தணியுமட்டும் விசித்திருந்து,
தணிந்த அவன் தணலாய் தளர்ந்த பின்.,

கழனியின் கதிர் காதலி பன் அருவாவின் அழகு அலகில்,
பரம்பரை பந்தத்தின் சிருங்கார அழகிகள் கத்தரி முதலும் தக்காளி பிறகுமென சொருகி,
தணலனோடு உறவாகி உறைந்திருக்க,
பட் பட எனும் சின்ன சிணுங்கலோடு வியாபித்த அவர்களின் அன்பு மணம் காற்றில் கலந்து,
நாசி வழி நா வில் நீராக.,

சிரித்து கடன் கொண்ட பெட்டி கடை சன்ன வத்தல்

மேலும்

yazhu - yazhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2019 12:45 am

இக்காலத்திலும் முடக்கப்படும் கைம்பெண்களுக்காக
(மிகு ஊர்ப்புறங்களிலும் சில நகர்ப்புறங்களிலும்)


எதை இழந்திருப்பீர் நீர்
எதைத்தான் இழந்திருப்பீர் நீர்

வித வித வண்ண உடைகளையா
வீரம் கொளும் விருமன்
மீசைகளையா
விரிந்தக் குழுமத்தின்
மகிழ்நிரல் தருணங்களையா

எதையுமே இழக்க மாட்டீர் நீர்

பெண்ணான துணை அவர்கள்
இல்லாது போனால்
வெளி வைய்யம் அறியும் வண்ணம்
எதையுமே இழக்க மாட்டீர் நீர்

அன்றில் இழக்க வைக்கப் பட மாட்டீர்

ஏ அழகு சமூகமே
உன் ஆழ் மனம் ஏன் இத்துணை அழுக்கு

அவள் பிறப்பிலேயே அவள்
கொணர்ந்த
வளை புருவ மண மொட்டுக்களை

பொறாமைக்கொள் அழகின் குழல் புணர்ந்த
கருங்காட்டின் நடு மொட்டுக்களை

சூட மறுத்திடும்

மேலும்

yazhu - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2019 12:08 am

கவிதை தேடல்
*****************
குழந்தையின் துயிலுக்கும்
கொலுசுகளின் விசும்பலுக்கும் நடுவே
கலைந்துக் கிடக்கிறது - அவளின்
கவிதைகளுக்கானத் தேடல்கள்.

யாழு மகிழ்.

மேலும்

yazhu - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2019 12:55 am

தாய் தன் குழந்தைக்கு சொல்வது,

எங்கள் உயிரும் மெய்யும் சேர்ந்து எழுதிய கரு எனும் கவிக்கு
என் உடல் வழி நான் அனுப்பிவைத்த காதல் காற்றாளன்.

எனக்குள் இன்னொரு நானுமாய்
உன் வெளி இன்னொரு நீயுமாய்
வாழ்ந்தமைக்கும்,

ஆண்டிடைவெளி உயிரறைத் தோழமையோடு
நமக்குள் நாமுமாய்
வளர்வதற்கும்,

பாசமுமாய் நேசமுமாய் அதையே
சுவாசமுமாய் நீள்வதற்கும்,
காரணப்பொருளாளன்.

உன் கருவோடு உருவாகி
உன் உயிரோடு உறவாகி
கணப்பொழுதிலும் உன்னைக் காத்திட்ட காதலன்.

உந்தித் தள்ளியோ
உயிர் சதைக் கிழித்தோ
உனை அள்ளி எடுக்கையில்
உனை முன் தள்ளி பின் வந்த
உயர் மிகு காவலன்.

உடலுக்குள் உயிர் வைத்து அந்த
உயிருக்குள் உயிர்

மேலும்

yazhu - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2019 12:45 am

இக்காலத்திலும் முடக்கப்படும் கைம்பெண்களுக்காக
(மிகு ஊர்ப்புறங்களிலும் சில நகர்ப்புறங்களிலும்)


எதை இழந்திருப்பீர் நீர்
எதைத்தான் இழந்திருப்பீர் நீர்

வித வித வண்ண உடைகளையா
வீரம் கொளும் விருமன்
மீசைகளையா
விரிந்தக் குழுமத்தின்
மகிழ்நிரல் தருணங்களையா

எதையுமே இழக்க மாட்டீர் நீர்

பெண்ணான துணை அவர்கள்
இல்லாது போனால்
வெளி வைய்யம் அறியும் வண்ணம்
எதையுமே இழக்க மாட்டீர் நீர்

அன்றில் இழக்க வைக்கப் பட மாட்டீர்

ஏ அழகு சமூகமே
உன் ஆழ் மனம் ஏன் இத்துணை அழுக்கு

அவள் பிறப்பிலேயே அவள்
கொணர்ந்த
வளை புருவ மண மொட்டுக்களை

பொறாமைக்கொள் அழகின் குழல் புணர்ந்த
கருங்காட்டின் நடு மொட்டுக்களை

சூட மறுத்திடும்

மேலும்

yazhu - yazhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2014 11:03 pm

உன் இதழின் ஓரம் சின்னதாய் விரியும் அந்த குறுநகை யாருக்காகவோ தெரியாது,,

என் விழியில் தொடங்கும் ஒவ்வொரு புன்னைகையும் உனக்காகவே என்பதை தவிர

உன் கரங்கள் தாங்க போவது எவளையோ தெரியாது

என் விரல்கள் தீண்டும் உரிமைஉனக்கு மட்டுமே என்பதை தவிர

உன் கவிதைகள் எவளுக்காக இசை மீட்டுகிறது என தெரியாது

என் வெற்று காகிதங்கள் கூட உன்னை மட்டுமே இசைக்கும் என்பதை தவிர

உன் பெயரின் முதல் எழுத்து எவளது உரிமையோ தெரியாது

என் பெயர் உன்னால் மட்டுமே முழுமை பெறும் என்பதை தவிர

உன் மொத்த காதலும் எவளுக்கோ தெரியாது


என் மொத்த காதலும் மிச்ச வாழ்க்கையும் உனக்காக என்பதை தவிர


மொத்தத்தில் நீ எனக்கானவ

மேலும்

அவஸ்தையும் கூட... 01-Sep-2014 11:31 pm
காதல் மிக அழகு 30-Aug-2014 12:18 am
கார்த்திகா அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Aug-2014 9:56 pm

யாரோ இருவர்
பெற்றோரை எதிர்த்து
காதல் திருமணம்
புரிந்து கொண்டால் அதைச்
சொல்லியே தலைவலிக்கச்
செய்யும் பாட்டி ......

அலைபேசியில் குறுஞ்செய்தி
கண்டு சிரித்திட்டால்
என்னவென்று வினவும்
விவரமான அம்மா....

எதிரே வரும் கண்
ஒரு கணம் உற்றுநோக்கினால்
யாரவன் என்ற கேள்விகேட்டே
துளைத்தெடுக்கும் அருமை சகோதரி...

வீட்டில் சிரித்தால்
அழகென்று கொஞ்சும்
தமையனுக்கு வெளியிடங்களில்
மௌனம்தான் பிடிக்கிறது....

பெற்ற மகளைப்பற்றி அறிந்தும்
குடும்பத்தின் பெருமைகளை
நினைவூட்டும் பாசக்காரத் தந்தை ....

எல்லாம் தெரிந்தும்
அனைத்தும் புரிந்தாலும்

காதலிக்கிறேன்,இன்னும்
கொஞ

மேலும்

வருகையில் மிக்க மகிழ்ச்சி நட்பே... 22-Mar-2015 2:39 pm
இந்த பாணிக் கவிதைகள் எனக்கு மிகப்பிடிக்கும் .........! ஒருவிதமான பட்டியல் தோரணையுடன் தொடர்ந்து, இறுதியில் ஒரு திடுக் உணர்வு கொடுக்கும் ! தங்கள் கவிதை அதே பாணியில் தொடர்ந்து, இறுதியில் திடுக் என்ற அதிர்ச்சியைக் கொடுக்காமல் திடுக் என்ற நெகிழ்வைக் கொடுக்கிறது .....! 21-Mar-2015 11:49 pm
நிஜம்தான் தோழமையே.... 19-Oct-2014 6:34 pm
மிக்க நன்றி நண்பரே!! 19-Oct-2014 6:34 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) vijayalaya cholan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Aug-2014 1:13 pm

தொலைக்காட்சி
பார்த்துக்கொண்டே
சாவகாசமாய்
வெங்காயம்
நான் நறுக்க .........

அடுப்படி
அவசரங்களோடு
அங்கிருந்தே
நீ
கத்தவேண்டும் !

=======================

உன்
தோள்தொட்டு
நான் பின்னால் அமர
கம்பீரப் புன்னகையுடன்
நீ
ஸ்கூட்டியோட்டி
வரவேண்டும் !

=======================

என்
வங்கிக்கணக்குக்
கடவுச்சொல்லை
நான் மறந்து
தவிக்கும்போது
செல்லமாய்
என் தலைகுட்டி
நீ வந்து
உதவவேண்டும் !

=======================

மேலதிகாரியிடம்
திட்டுவாங்கி
இருண்ட முகத்துடன்
நான் வர
உன் மார்போடு
எனை அணைத்து
ஆறுதல் கதைகள்
நீ
சொல்லவேண்டும் !

======================

மேலும்

அஹா .........மூன்று முறை படித்து விட்டீர்களா .......அவ்வளவுதான் இனிமேல் இந்தக் கவிதையை யாரும் படிக்க முடியாது ! காரணம் இது முக்தி அடைந்து விட்டது ! மிக்க நன்றி ! 04-Sep-2014 5:06 pm
அனைத்து வரிகளுமே அருமைத்தோழா...! 3முறை படிக்க வைத்துவிட்டிர்கள் அவ்ளோ அழகு நட்பே. 04-Sep-2014 3:24 pm
எழுதும் போது என்னுயிரையும் கொஞ்சம் வருடவே செய்தது நண்பரே ............மிக்க நன்றி 30-Aug-2014 10:10 am
மிக்க நன்றி தோழா 30-Aug-2014 10:10 am
ராம் மூர்த்தி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Aug-2014 4:29 pm

காதல் கவிதைகளை
ஒரே மூச்சில் எழத முடிகிறது.
புரட்சி கவிதைகளை
எழுதித் தொலைக்க
வேண்டியிருக்கிறது...
நிறுத்தி நிதானமாய்.

என்னில் தோன்றியது...
இன்னொருவனுக்கு
தோன்றும் போது,
என்னை விட
அழகாய் வடித்து விடுகிறான்...
கவிதை.!

பத்து கவிதையை
பாராட்டும்
மகிழ்ச்சி
வரவே இல்லை...
நூறு கவிதை
எழதிய போது.

நீ நீயாகவும்
நான் நானாகவும்
இல்லாதபோது...
நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
எழுதுவதே.
கவிதை.!

கவிதைகளை
விற்காதீர்.
விற்று விட்டு
எதை வாங்குவீர்.?
அதை விட
சிறந்தததாக.

ஒரு கவிதை
பார்க்கப்படாதபோது கூட
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது...
பார்க்காதவரை
மன்னித்த

மேலும்

மிக்க நன்றி ஐயா ... 24-Aug-2014 10:46 am
கவிதைக்கு பல விளக்கங்கள். அருமை 24-Aug-2014 7:25 am
நன்றி மேகலை 23-Aug-2014 12:42 pm
கவிதை நோட்டில் கிறுக்கிய குழந்தைகளுக்காக நீங்கள் செய்ய வேண்டியது.! உங்கள் கவிதைகளை கிழித்தெறிவதுதான். // தலைவா........ அழகோ அழகு கவி....!! 22-Aug-2014 8:12 pm
yazhu - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2014 2:51 pm

வானப் பெருவெளியிலும்
அலையும் காற்றினிலும்
இரைச்சல்களின் ஊடாகவும்
திரிந்து கொண்டிருந்தன
அடையாளமற்ற சொற்கள்..!

கண்டபடி எடுத்தாளவும்
காணாமல் புறம்பேசவும்
கட்டற்ற சுதந்திரத்தையும்
கணக்கற்ற வரைமுறையும்
அனுமதித்திருந்தன சொற்கள்..!

விளம்பரத்திற்காகப் பேசியவன்
அதிகாரத்தைப் பிடிக்கவும்
ஊழலுக்கு சாட்சியாக
நிறுத்தியதை எண்ணியும்
வருத்தமுற்றிருந்தன சொற்கள்..!

பேசியவன் வாயிலும்
எழுதியவன் கையிலும்
நுழைந்து வெளியேறி
சிலநேரம் நிம்மதியற்று
சிதைந்திருந்தன சொற்கள்..!

விரக்தியும் கோபமும்
ஆதங்கமும் ஆத்திரமும்
அகத்திலே கொண்ட
சொற்கள் இப்போது
சும்மாதான் கிடந்தன..!

ஒவ்வொன்றாய்ப் பொறு

மேலும்

நானும் உங்க ரத்தம்தான் அண்ணே . ஆனா O + . Hopeless இல்ல. 17-Aug-2014 5:57 pm
உங்கள் மீள் வருகைக்கு மிக்க நன்றி தோழரே.! உங்கள் கவிதைத் தொகுப்பு வெளியிடும் செய்தியும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வெளியீடு குறித்த-நேரம், இடம் ஆகிய விபரங்களையும் தளத்தில் பதிவு செய்யுங்கள். வாய்ப்பு இருப்பவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளட்டும்.நானும் முடிந்தவரை திருப்பூர் வர முயற்சிக்கிறேன். வாய்ப்பு இருந்தால் நேரிலும் சந்திப்போம்.! 13-Jun-2014 9:33 pm
நன்றி நண்பரே ! உங்களை பற்றிய செய்தி ஒரு ஆங்கில நாளிதழில் படிக்க நேர்ந்தது. வாழ்த்துக்கள். ஏதோ ஒரு ஒற்றுமை நம்மிடையில் உள்ளதை உணர்கிறேன். கர்ச்சாகின் எனது நீண்ட வருட நாயகன். வரும் ஜூலை 20ம் தேதி திருப்பூரில் எனது முதல் கவிதை தொகுதி " காற்சுவுடுகளும் காலணியும் " கவிபேரரசு வைரமுத்து அவர்களால் வெளியிடப்படுகிறது என்ற தகவலையும் கூற விரும்புகிறேன் ! 13-Jun-2014 5:00 pm
உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர் கர்ச்சாகின்.! உலகப் புகழ் பெற்ற பாத்திரத்தின் பெயராக இருக்கும் உங்கள் பெயரை பார்க்கும் போதே எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹூம்..ஒரு காலத்தில் எனது புனைப் பெயராக வைத்துக் கொள்ள விரும்பிய பெயரும்கூட..! வாழ்த்துக்கள் தோழரே.! 12-Jun-2014 10:15 pm
yazhu - கிருஷ்ணா புத்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2014 6:19 pm

நான் ரசித்த கவிதை
(அம்மா என் கூட இருக்கிறார்கள் நான் சப்டுட்டு இருக்கன் எனக்கு பொரை ஏருச்சு என் அம்மா தலையை தட்டி யாரோ உன்ன நினைக்கிறங்க னு சொன்னாங்க )
நான் சொன்ன வார்த்தை அடி வாங்க போர நீ எனக்கு யாரோ வா

மேலும்

அருமைங்க!!! 16-Aug-2014 4:26 pm
கிருஷ்ணா கலக்குறீங்க ! நீ இரசித்த கவிதை இல்லப்பா இது ! எல்லோரையும் இரசிக்கவைக்கும் கவிதை ! எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இத்துனை அழகு கவிகளை ! 16-Aug-2014 10:08 am
அழகு ! வாழ்க வளமுடன் 16-Aug-2014 2:40 am
என்னை ஐயா ன்னு சொல்லி கொல்லாதிங்க . ஹஹஹாஹ் .பெயரொ , தோழரோ , அண்ணாவோ போதும்.வாழ்ததுக்கள். 15-Aug-2014 9:30 pm
yazhu - முகில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2014 6:26 pm

காய்ந்து போன பயிர்களைக்
காப்பாற்ற கண்ணீர் வடிக்கிறான் !

தண்ணீர் விட வழி இல்லாத
விவசாயி !

தழைக்குமா உயிர் !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

Naveen

Tiruppur

இவர் பின்தொடர்பவர்கள் (12)

user photo

வைஷ்ணவி

புதுவை
RAM LAX

RAM LAX

வேதாரண்யம்

இவரை பின்தொடர்பவர்கள் (12)

srivijayvel

srivijayvel

srivijayvel
RAM LAX

RAM LAX

வேதாரண்யம்
மேலே