காதல் அடம்

உன்னிடம் அடம் பிடித்து நான் வாங்கிக் கட்டிய புடவை
நான் அழுதாலும் நீ ஊட்டி விட்ட பாகற்காய்
திட்டி விட்டு தூங்கிய திங்கள் கிழமை
நீ வந்தவுடன் உன்னை பாசமாய்
சுற்றித் திரியும் நம் குட்டி நாய்
சிறிய வீட்டிலும் செடி வளர்த்து
களைப் பறிக்கும் உன் செல்லக் கைகள்
உன் அம்மா என்னை திட்டியவுடன் கண்களால்
என்னை பார்த்துக் கேட்கும் கோடி மன்னிப்பு
பேருந்து இருக்கையில் தனியே அமர்ந்தும் எட்டி எட்டி
பார்த்து வாங்கிக்கொண்ட வசன மொழிகள்!
காலையில் நீயே பொறுப்பாய்க் கழுவி வைக்கும் தேநீர்க்கோப்பை
இப்படி உன்னை நினைவு படுத்தும்
எத்தனை நிகழ்வுகள் ஒரு நாளில் !
நீ மறந்துவிடு என்று என்னை மன்றாடுகிறாய்

மிகச் சாதா "ரணமாய்"

எழுதியவர் : priyaraj (30-Aug-14, 8:51 pm)
Tanglish : kaadhal adam
பார்வை : 73

மேலே