விழியதிகாரம் - 2 சந்தோஷ்

விழியதிகாரம் -

யார் அவள்- ?
------------------------------------------

அவள் ஒரு திமிர்ப்பிடித்தவள்
அந்த திமிரில்
-- என் மீதான ராட்சஸத
அன்பு இருக்கிறது
--- என் மீதான அகோர
பாசம் இருக்கிறது
-- என் மீதான வன்முறை
ஆசை இருக்கிறது.

அவள் திமிர்ப்பிடித்தவள்
அன்பு பாசம் ஆசை
ஏதும் அறியா
ஜடமாய் திரிவதாய்
பொய்யுரைப்பாள்.

பொய்யுரைத்தவளின்
விழி சொல்லும்
என் மீதான அவளின்
காதல்மொழியை..!

ஆனாலும்
நான் அவளுக்கு
காதலன் என்றாகவேமாட்டேன்
அவள் எனக்கு
எக்காலத்திற்கும்
காதலி என்றாகவேமாட்டாள்

என்றாலும்
நாங்கள் காதலர்கள்..!
காதலர்களை போன்றவர்கள்..!

ஆம் .!
காதலர்கள் என்ற சொல்லுக்கு
மாற்று சொல்லற்று
விக்கி திக்கி தவிக்கிறோம்.

இந்த
விக்கல் தவிப்பில்கூட
அவள் விழிக்குதிரையில்
என் இதழ்மன்மதன்
ஆடும் முத்தநாட்டியத்தில்
ரசித்தப்படியே
அடங்கியே விடும்.


-----------------------------------------------------
விழியதிகார நாயகி..!

என் கற்பனையில்
எழுதப்படுபவளா?
இல்லை
என் கற்பனைக்கு
வசப்பட்டவளா ?

முடிவுரையில்
தெளிவுரை பிறக்கும்..!
பிறக்கலாம்.
அல்லது
மரணிக்கலாம்.


(விழியதிகாரம்- தொடரும்.)


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (31-Aug-14, 2:31 am)
பார்வை : 155

மேலே