அடேய் ,என் உயிர்கொல்லியே
உன் நிறம் மங்கி தெரிகிறாய்
அழகு நிலையம் போ என்கிறாள்
தோழி
அவளுக்கு எப்படி தெரியும்?
உன் ஒரு பார்வை குளியலில்
என் கருன்கூந்தல் கூட
சிவந்து போகும் என்று .
உன் பட்டு விரல் தீண்டலில்
என் பட்டுப்போன ஆசைகள்
தளிர் விட்டு பூக்கும் என்று.
உன் அன்பு முத்தம் ஒன்றே
என்னுள் ஆயிரம்
வர்ணம் தீட்டும் என்று.