செய்வதறியாமல்

செய்வதறியாமல்
குழம்பும் மனம்
சக்தியை இழக்கிறது
மனதளவிலும்..!

நமக்கு மட்டும்
ஏன் இப்படி ?
என்று கேள்விகளுக்கு
விடை தேடும் மனம்
வினாகுரியாகவே நிற்கிறது..!

மற்றவர்களிடம்
பகிரக்கூடிய
பலவற்றை கூட
எப்படி என்று
முழு மனதாக
சொல்ல தெரியவில்லை..!

நான் மட்டும்
உணரக்கூடிய
சிலவற்றை
எப்படி என்று
ஆச்சரியங்களுக்குள்
அடைபடுகிறது
மனம்...!

எத்தனையோ
எண்ணங்களில்
கலங்கும் மனம்
கவிதை மட்டுமே எழுதுகிறது...!

அதுவும் இதுபோன்ற கிறுக்கல்கள்தான்...!
என்ன செய்வது ?

எழுதியவர் : சதுர்த்தி (2-Sep-14, 12:36 am)
பார்வை : 239

மேலே