நான் மரமான கதை
கண்ணுக்குள் புதைபட்ட காதல் விதைகள் ..!
மூளையெங்கும் அவள் நினைவின் வேர்கள்..!
காலவரையன்றி முளைவிடும் கனவின் கிளைகள்..!
அலைபாயும் கேசமே ஆசையெனும் இலைகள்..!
பார்வைதோரும் படர்ந்த மௌன மொட்டுக்கள்..!
வா(ழ்) நிலை தவறியதால் ,
மனமெங்கும் மலர்ந்துவிட்ட கண்ணீர் பூக்கள்..!
இனி காய்க்கவே வழி இல்லை,கனிய இடமேது..!
ஓர் முடிவுறா இலையுதிர்காலம்.....
இன்று முதல் ஆரம்பம்..!!