நீ என் அருகில்
தென்றல் என்னை தொடும் போதெல்லாம் உணர்கிறேன்
நீ என் அருகில்தான் இருக்கிறாய் என்று
பூக்கள் சிரிப்பதை பார்த்து சொல்கிறேன்
அவைகள் உண்னை பார்க்கின்றன என்று
பட்டாம்பூச்சி பறப்பதை பார்த்து நினைத்து கொள்கிறேன்
நீ விளையாடுகிறாய் என்று
இத்தனையும் செய்யும் நீ
என் கண்ணீரை துடைக்க வராததால் மட்டும்
நீ இல்லாமல் போவாய் என்றால் ?
தேற்றிக்கொள்கிறேன்
நான் பார்வை இல்லாதவன் என்று..