கண்ணன் வருகைக்காக காத்திருக்கும் ராதை
ராதை இல்லத்தில் தன்
கண்ணன் வருவான் என்று
வழி மேல் விழி வைத்து காத்து
கொண்டிருக்கிறாள்!
கண்ணனோ சிறு வேலைகளால்
பல நேரம் தாமதமாக வருகிறான் !
கண்ணன் வரும் செய்தியை அறிந்த
ராதை தன் உயிர் தன்னிடம் வந்து
சேருவதை எண்ணி புன்னகைக்கிறாள் !
கண்ணனின் மார்போடு சாய்ந்து கொள்கிறாள் !
ராதை கண்ணனின் பிரிவை தாங்கமுடியாமல்
கண்கள் கலங்குகிறாள்!
கண்ணனோ என்னுடைய நேரம்
எவ்வளோ தாமதம் ஆனாலும் உன்னிடம்
வந்து சேர்வேனோ தவிர உன்னை விட்டு
விலகமாட்டேன்என்று அவனுடைய காதலை
அன்போடு பகிர்ந்து கொள்கிறான் !
கண்ணனோ ராதையின் கண்கள் வழியாக
தன் காதலை காண்கிறான் !
ராதையோ கண்ணனின் கண்கள் வழியாக
தன் காதலை காண்கிறாள் !
இவர்கள் தன் காதலை கண்கள் வழியாக
மட்டும் அல்ல !
இதயத்தின் வழியாகவும் உணர்ந்து கொள்கிறார்கள் !