நான் கொண்டாடும் முதல் ஆசிரியர் தினம்

அவள்(ர்) இல்லையென்றால்
நான் இந்நேரம்
எழுத்தில்
எழுதிக் கொண்டிருக்க
மாட்டேன்
சமையல் அறையில்
பால் கணக்கோ
மளிகைக் கணக்கோ
எழுதிக்
கொண்டிருந்திருப்பேன்,,,,
நான் முதன்
முதல் வாசித்த
நாவல் அவள்
பரிசளித்ததுதான்
பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பதை
பாவமாக கருதும்
என் பந்துக்களிடம்
என் மேல் படிப்பிற்காக
பரிந்துரை செய்தாய்........
நீ பள்ளி பணியிலிருந்து
ஓய்வு பெற்றாலும் என்
பாசையில் இருந்து மட்டும்
நீ ஓய்வு பெறவே இல்லை.......
தமிழ் மேல் ஆர்வம்
ஏற்படுத்தி
என் தரத்தை உயர்த்தினாய்
நீயும் எனக்கு ஒரு தாயே ....
என் பள்ளியில் ஒரு போட்டி
அதில் மாணவர்கள்
மனதை கவர்ந்த
ஆசரியை நான் என
தேர்வு செய்ய பட்டேன்........
என் வகுப்பு என்றால்
மிகவும் சுவாரசியமாம்
பள்ளி பேருந்தில் கூட
என் அருகே அமர
மாணவர்களுக்கு இடையில்
தள்ளு முள்ளு......
நான் சிறப்பாக வகுப்பெடுக்கிறேனாம்
பெற்றோர்கள் புகழாரம்......
அவர்களுக்கு தெரியாது
இதற்கெல்லாம் காரணம்
நான் அல்ல
என்னுள் இருக்கும்
நீ என்று
என்னையும் உன்னைப்போல்
மண்ணுலகில்
ஒரு ஆசிரியையாக
உருவாக்கி விட்டு
இன்று நீ
மட்டும் விண்ணுலகம் சென்று
விட்டாயே நியாயமா
இதோ நானும்
இன்று ஒரு ஆசிரியையாம்
ஆனால் நான்
என்றுமே உனக்கு
மாணவிதான்.........
நான் கொண்டாட போகும்
முதல் ஆசிரியர் தினம் இது
வழக்கம் போல என்னுடைய
வாழ்த்துக்களை நான் உனக்கு
கூறி விட்டேன்
எனக்கு வாழ்த்து கூற
மீண்டும் பிறந்து வருவாயா
காத்திருக்கிறாள்
இந்த ஆசிரியை
உன் வருகைக்காக
ஒரு மாணவியாக.......
(என்னையும் ஒரு ஆசிரியையாக உருவாக்கிய என் 10ம் வகுப்பு ஆசிரியை பாலாமணி தமிழ் அம்மாவிற்க்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இதை சமர்பிக்கிறேன்)