அபிக்குறள்
ஓரிறை ஒன்றுகுலம் என்றுநமைக் காத்திடும்
சீரிறை சிந்தையில் வைத்து .
தமிழைப் படித்துத் தமிழராய் வாழ்ந்தால்
தமிழும் வளரும் தளைத்து.
விஞ்ஞானம் போற்றும் வியத்தகு நம்தமிழை
மெஞ்ஞானம் கூட வியக்கு.(ம்)
ஒற்றுமை மேலாக்கும் ஓங்கும் துயர்மாய்க்கும்
பற்றுடன் நீஎண்ணிப் பார் .
விரிந்த அறிவும் வெகுளித் தனமும்
இருக்கும் மனமே சிறப்பு.
எழுத்துடோட் காம்நமது எண்ணத்துள் வைப்போம்
செழிக்க உழைக்கலாம் சேர்ந்து.
வாழ்க்கை அழகாகும் வருமேநல் சிந்தனைகள்
தாழ்வுமனப் பான்மை தவிர்.
பொதுநலம் எண்ணிப் புரிந்தெழுதும் பாட்டு
எதுநலம் என்பதின் காட்டு.