போதும் போதும் - கவிதை
போதும் ! போதும் !
இந்த ஒரு நொடி போதும்
வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ள
இந்த ஒரு நொடி போதும்
எனைத் தேடி ஓடிவரும் செல்வங்களை
பார்க்கும் இந்த ஒரு நொடி போதும்
மலர்ந்த முகத்துடன் வாழ்த்தும் அக்கணம்
உன்னைத்தானே நேற்றுக் கடிந்தேன் ?
அதை மறந்து இன்று ஓடோடி வருகிறாயே !
இவ்வொரு நொடி போதும் .
வாழ்வின் முன்னோடி தேடி ஓடும் மானிடரே – நம்
மாணவச் செல்வங்கள் தாம் நம் முன்னோடி.
இக்கால ஔவை சொல்லும் சொல் கேளும்
‟அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
அதிலும் ஆசிரியராய் மலர்தல் மிகமிக அரிது”
போதும் ! போதும் ! பிறவிப் பெரும் பயன் அடைந்திட்டேன்.
ஆசிரியையாய் வாழ்வில் இன்பம் அடைந்திட்டேன் .
கே.ஜமுனா