இரவின் அழகு

ஆகாய சுவற்றில் கருஞ்
சித்திரமாய் சாலையோர மரங்கள்...
காதலில் சிலிர்த்து தென்றல்
மீட்கும் வீணையாய் நாணல்...
நதியும் கரையும் இனைய
சலங்கையாய் சலசலக்கும் அலைகள்..
பல்லாயிரம் அகல் ஏற்றி
பகலவனுக்காக விழித்திருக்கும் பால்நிலவு...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (6-Sep-14, 11:58 pm)
Tanglish : iravin alagu
பார்வை : 791

மேலே