எதேச்சை

சாலையைக்கடக்கையில்,
எதிரெதிரே சந்தித்துக்கொண்டோம்,
விழிகளுக்கு விழிகள் !
எத்தனை பரவசம் எனக்கும் அவளுக்கும் !
அழகி சிரித்து தலைகவிழ்ந்து போய்விட்டாள் !
நான்மட்டும் அங்கேயே வாகனங்கள் புடைசூழ !
எத்தனை மகிழ்ச்சி எக்காலம் மனதுக்குள் !
மற்றபடி,
என்ன நினைத்துச் சிரித்தாளோ?
அது அவளுக்கே வெளிச்சம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Sep-14, 8:40 pm)
Tanglish : edhechai
பார்வை : 103

மேலே