அழியும் எம் இனம்

அழியும் எம் இனம் ..!

செந் தமிழா எம் தமிழா
சிந்தை கொஞ்சம் துலக்கு
உந்தனது தாய் மண்ணில்
உலவும் நிலை விளக்கு ..

ஆண்ட தமிழர் பண்பாடு
அழிவ தென்ன சொல்லு ..?
அதை தடுக்க வழியின்றி -நீ
அலை வதேனோ சொல்லு ..

வந்த பகை மொழி கலப்பை
வகுத்து தரு வதென்ன ..?
தங்கை அக்கா மணம் முடித்து
தந்த கலப் பென்ன ..?

உன் னினத்தில் புது கலப்பு
உள்ளே வருதல் என்ன ..?
உளவு செய்யா நீயும் இங்கே
உளவு வது என்ன ..?

ஏன் விழிக்க நீ மறந்தாய்
எனக்கும் கொஞ்சம் சொல்லு
எம் தமிழன் நீ என்று
எதுக்கு சொன்னாய் சொல்லு ..?

கையில் பணம் வந்தா நீயும்
கலாச்சாரம் சிதைப்பாயா ..?
கண்டவர்கள் இன கலப்பை
கண்ணே நீயும் செய்வாயா ..?

உண்டு கழித்து நீ உறங்கி
கண்டதென்ன சொல்லு ..?
உன் அடிமை நீ அழிக்க
மறந்த தென்ன சொல்லு ...

என்று வரை நீ தொடர்வாய்
எனக்கு கொஞ்சம் சொல்லு
இக் கலப்பை நீ மறந்தால்
எம் இனம் இழப்பாய் எண்ணு ..!

வன்னி மைந்தன்
06-09-14

எழுதியவர் : வன்னி மைந்தன் (7-Sep-14, 7:46 pm)
சேர்த்தது : வன்னி மைந்தன்
Tanglish : aziyum yem inam
பார்வை : 59

மேலே