சிலுவையில் என் காதல் சிறகுகள் --- அரவிந்த் C
![](https://eluthu.com/images/loading.gif)
எழுதுகிறேன் உன்னை எண்ணி,
நான் எழுதும் வரிகள் உனக்காகவும்,
அந்த வரிகளின் வலிகள் எனக்காகவும்...
உன்னை குறை சொல்லி
கவியெழுத விருப்பமில்லை
விலகி நிற்கும் போதிலும்
வாழ்கிறாய் என்னுள்ளே...
நீண்டு நிற்கும்
உன் நினைவுகளுடன்,
நீந்தி கடக்கும்
என் காலங்கள்..
சிலுவைகள் சுமக்கும் காலத்தையும்
சிறகுகள் சுமந்த காலத்தையும்
கண்ணீரால் வடித்து வைக்க
விருப்பமில்லாமல்,
கவியாய் வடித்து வைக்க
சொல்லெடுத்து செதுக்குகிறேன் நான்...
சிரிக்க வைத்தாய்
என்னை அப்பொழுது,
சிரித்தது போதும்
அழுதிடு என்கிறாய் இப்பொழுது..
சிரித்துக் கொண்டே
அழுகின்றேன்,
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கின்றேன்..
எமனிடமிருந்து என்னை காக்கும்
அமுதமும் நீயே
எமனுக்கு என்னை பலியாக்கும்
நஞ்சும் நீயே..
அளவுக்கு மீறினால்
அமுதமும் நஞ்சு
என்பதை நிரூபித்து
செல்கிறாய் நீ...
பிரம்மன் படைத்த
பேரழகியும் நீ தான்
அரக்கியும் நீ தான்...
விடுகதையாய் இருக்கும் நீ,
விடையறியாமல் தவிக்கும் நான்,
விடை அறிவதா இல்லை
விதியென்று விலகி நிற்பதா...!!!