உயிருக்குள் உயிரானவளே 555

உயிருக்குள் உயிரானவளே 555

என்னவளே...

உன்னைக்கான
ஓடிவந்தேன்...

மைல்கல் பலதாண்டி
ஆவலுடன் ஓடிவந்த எனக்கு...

பரிசளித்தாய் உன்
புன்னகை பூக்களை...

அழகாகவும் உதிர்த்தாய்
உன் புன்னகையை எனக்காக...

மல்லிகை பூக்களை
உன் கூந்தல் சுமந்தபடி...

என்னை கண்டதும்...

மணித்துளிகள்
சில கடந்து...

நாம் விடை பெரும்
நேரம் நெருங்க நெருங்க...

உன் விழிகளில் தேங்கி
நிற்கும் கண்ணீர் துளி...

என்னைவிட்டு பிரிந்து செல்ல
மனமில்லாமல்...

நீ பிரிந்து செல்கிறாய்...

அன்று நீ உதிர்த்த புன்னகை
பூக்கள் மட்டும்...

எனக்கு
உன் நினைவாக...

மீண்டும் நாம் சந்திக்கும்
நாள் வரை...

அந்த புன்னகை மட்டுமே
என் நினைவில்...

ஓயாத அலைகளாக...

உயிருக்குள் உயிரானவளே...

என் உயிரானவளே
காத்திருகிறேனடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Sep-14, 9:10 pm)
பார்வை : 183

மேலே