எனக்கான உலகம்

இசை காற்றாய் வீச
பூமியின் ஈர்ப்பு விசை விட்டு
ஒலி குறிப்புகளின்
ஊடே,
நடந்து , தாவி, தவழ்ந்து
மிதந்து தேடுகிறேன்,
என் பழையது இல்லாத இடத்தை
இசை மட்டுமே மொழியாக இருக்கும் இடத்தை
ஒலிக்குறிப்புகள் பூக்களாக பூக்கும் இடத்தை
இப்படியாக எனக்கான உலகத்தை
தேடுகிறேன் ...

எழுதியவர் : சூரியா (7-Sep-14, 10:26 pm)
பார்வை : 94

மேலே