உள்ளத்தின் உளறல்

என் விழிகள் சிந்தும்
விலையில்லா நீர்த்துளிகள் !
விதைகளாகிப் போகின்றன
விடியலில்லா இரவுக்கு !

என் எண்ணங்கள் பாடும்
எண்ணிலடங்கா கவிகள் !
உறவில்லா மனிதனைப் போல்
உருக்குலைந்து போகின்றன !

இந்த பாழும்மனது மட்டும்
பைத்தியம் பிடித்து அலைகிறது !
பட்ட துயருக்கு என்றாவது
ஒருநாள் பலன் கிடைக்குமென்று !

நிலவை கையில் பிடிக்க
எனக்கொன்றும் ஆசை இல்லை !
நீந்திக் கடக்கத்தான் முயல்கிறேன்
இந்த வாழ்வெனும் பெருங்கடலை !

என் முயற்சி முழுமையடைவதும்
இத்துன்ப அலையில் மூழ்கிபோவதும் !
இதை என்னை எழுதச்செய்த
அந்த இறைவனின் கரங்களில்தான்......

படைத்த உள்ளம் :
நா அன்பரசன்......

எழுதியவர் : நா.அன்பரசன்.. (9-Sep-14, 2:06 pm)
Tanglish : ullaththin ularal
பார்வை : 78

மேலே