படம் ஒன்று பாக்கள் மூன்று
![](https://eluthu.com/images/loading.gif)
ஓங்கிய பர்வதம் ஒட்டடைக் குச்சியாய்த்
தூங்கிடும் மேகத்தைத் தூசுதட்டும் -பாங்காய்க்
குதித்துக் குளிப்பாட்டும் கொட்டு மருவி
விதித்த யியற்கை வனப்பு
மிதந்துவந்து முத்தமிட்ட மேகவுலாக் காட்சி
இதயத்தைக் காந்தமாய் ஈர்க்கும் - பதவிசாய்
பச்சைவண்ண பட்டாடைப் போர்த்தித் துயின்றிடும்
உச்சிநீண்ட நெட்டை மலை .
நீலகண்ட மேனியனோ நீண்டுவளர் பர்வதம்
கோலயெழில் மேகங்கள் கும்பிடுதோ? -பாலருவிப்
பொங்கிவிழ பாலால் புனித அபிடேகம்
எங்குமிறை யின்காட்சி யே !