பூகம்பம்
* நாடு நலம்பெற
தொடர்ச்சியாய் முயற்சியை
உடற் பயிற்சியாய்க் கொண்டு
வளர்ச்சியிலே வானளவு உயர்ந்து
வட்டமிட்டு பறந்து
திட்டமிட்டு சிறந்து
அறிவை செரிவுபடுத்தி
அயராது உழைத்த
அஞ்சா நெஞ்சங்கள் நிறைந்த ஓர்
அற்புதத் தீவாம் ஜப்பானில்
* ஆணவ அலை வந்து
அணு உலையை அடித்து இடித்துவிட
ஆயிர மாயிரம் உயிர்
அப்படியே மடிந்து விட
கதிர்வீச்சு ,கருவறை
உயிர்மூச்சையும் கரைத்துவிட
உறைகிறது உதிரம்,
சாகாமலே உணர்கிறேன் நான்
சாவை, சாலை இருந்த
இடங்களெல்லாம்
கிடங்குகளாய் இன்று
சடலங்களை சமாதி செய்திட!!!
* ஹிரோஷிமா, புகோஷிமா என
அழிவுகள் பஞ்சமில்லாமல்
தஞ்சமிருக்க அங்கு
எஞ்சியுள்ள வாழ்க்கையை எண்ணி
அஞ்சுவதேனோ அவர்கள்
கஞ்சிக்காக அல்ல,அவர் பெற்ற
பிஞ்சுக்காக !!!!
* அறிவியலை
ஆக்கத்திற்கு மட்டும் - நாம்
அனுமதிக்க மறந்துவிட
அழிவுகள் அடுக்கடுக்காய்
அன்றாடம் அமைந்துவிட
இனியாவது இயற்கையை
இயல்பாய் இருக்கவிட்டு - நாம்
இருக்கும்வரை இணைந்தே வாழ்வோம் -நம்
இதயங்களில்
இரக்கங்களை கனிய விட்டு !!!!!!!!
- குட்டி