முக நூல்

விவேக் பாரதியில் முக நூல் பதிவுக்குப் பதிலாக எழுதியது..
முக நூலை
மூடிவைத்து
வெளியில் வாருங்கள்!
முத்தத்தில்
காத்திருக்கும்
நிலவைப் பாருங்கள்!
அக நூலைத்
திறந்து வைத்துப்
படிக்க வாருங்கள்!
அருகிலுள்ள
உயிர்களையே
அணைத்து வாழுங்கள்!
ஜெக நூலில்
இறையெழுதும்
படைப்பை நோக்குங்கள்!
ஜீவனுள்ள
வாழ்க்கையினை
ஜெயிக்க வாருங்கள்!
யுக நூலில்
உம்பெயரை
எழுத வாருங்கள்!
யோசனைகள் எதற்கு?பிணக்கை
எடுத்து வீசுங்கள்!
== ==

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (11-Sep-14, 10:49 am)
Tanglish : muga nool
பார்வை : 108

மேலே