காலிறுதி வெற்றி கடைசிவரை வெற்றியாக வாழ்த்துக்கள்!
மூன்று முறை தொடர் உலககோப்பை
முடிவடையா எங்கள் சரித்திரம்
நான்காவது முறையும் இப்போது
நாங்கள்தான் வெல்வோமென்று
நம்பிக்கையா தெரியவில்லை
நடந்தது இதற்கு வேறாய்
கர்வப்பட்ட ஆஸ்திரேலியாவை
காலிறுதியில் தோற்கடித்த
இந்திய அணி வீரர்களுக்கு
எங்களது பாராட்டுக்கள்
ஐந்து பேர் நடையைகட்டியதும்
அவ்வளவுதான் இனி தோல்வியென்று
வேதனைக்கு விளையாட்டென்றால்
வெள்ளி வந்து முளைக்குதென்று
தோள்கொடுத்து துணையாய் நின்று
துடுப்பாட்டத்தில் கவலை கடலை
பந்துகளை படகாய் விரட்டி
பகலவனாய் வெற்றி பறித்தார்
அரையிறுதிக்கு நீ நுழைந்துவிட்டாய்
ஆணவத்தினை அழைத்துவிட்டால்
பக்கத்து நாடு பாகிஸ்தானோ
பகையைகூட விளையாட்டில்
அணுகுண்டை பந்தையெடுத்து
ஆரம்பிக்கும் மூன்றாம் உலகபோரை
அமைதிக்கும் பொறுமைக்கும் ஒன்றிணைந்து
ஆடுகளம்தான் போர்களமில்லையென்று
பந்தையடித்து பகையை விரட்டு
பக்குவமாய் துடுப்பாட்டம் பிடித்து
உணர்ச்சி என்றும் உயர்ச்சியில்லை
உயர்ச்சியென்றும் முடிவேயில்லை
வெற்றியென்பது விளையாட்டிலும் எதிலும்
வெவ்வேறு நிலைக்கு உயரும் படியே
ஒவ்வொரு படியிலும் உட்கார்ந்து கொண்டு
உச்சத்தை அடைந்தோமென்று உணர்ச்சிபட்டால்
உருண்டுகூட விழுவதுண்டு
உந்தன்கால்களோ தடுக்குவதுண்டு
நமக்கு தேவை உலககோப்பை
நன்றாக நீ அடிவைப்பதால்
கிடைக்கும் கோப்பை கிடைக்குமென்று
கிட்டத்தட்ட நீ நெருங்கிவிட்டாய்
வாங்கி தந்து விடு வரலாற்று நாயகனுக்கு
வாகை சூடி அனுப்பி வைப்போம் சச்சினுக்கு