கண்கள் பனிக்கிறது
விழியில்லை வழியுண்டு
விதியில்லை மதியுண்டு
ஒற்றுமையில் கோடுபோட்டால்
உலகம் ஒரு சாலையாகும்
கடந்து போக கண்கள் வரும்
கடவுளுக்குதான் புண்களென்று
தமிழனுக்கும் இனிதேவை
தன்மானத்தில் வாழ்வதற்கு
பார்வையென்றால் ஒற்றுமைதான்
பாதையென்றால் உலக வெற்றி
மறைத்து வைக்கும் கண்களுக்கு
மக்களாட்சி பழியிருக்கு
மாற்று திறனாளிகளின் வெற்றி கண்டு
மாறிடுவோம் தமிழனென்று
மனித நேயம் வளர்ப்பதற்கு
மனிதர்தான் நாம் உணர்வதற்கு
மனதில் இனி உறதி ஏற்போம்
மாசின்றி உலகம் காண !