எது வீரம்
பேருந்து நெருக்கத்தில்
உரசும் கயவர்களை
ஒதுங்கி நின்று ஓரக்கண்னால்
பார்ப்பதா வீரம்
ஓங்கி அறைவதன்றோ வீரம்????
இருச்சக்கரமத்தில் நான் இருக்க
காற்றுதனில் என் மேலாடை பறக்க
கண்கள்தனில் என் மானமதை பறிக்க
நினைக்கும் காமுகர்தம்மை
விட்டு செல்வதா வீரம்
காரித்துப்பி செல்வதன்றோ வீரம் ????
தெருநாய் இடம்தனில் அமர்ந்து
நாம் போக வர
வீண்ப்பேச்சு பேசும் வீணர்களை
முறைத்துப்பார்ப்பதா வீரம்
மூக்கை உடைப்பதன்றோ வீரம் ???
குடம் தூக்கும் வெறும்
மங்கையென்று பேசும் மடையர்களை
கடந்து செல்வதா வீரம்
காலி செய்வதன்றோ வீரம் ????
இதயத்தில் இடம் தருகிறாயா
இருக்கையில் இடம் தருகிறாயா என்று
இருக்கையில் அமர்ந்து
இடது தோளை உரசும்
காமூகர்கலை
கண்டித்து செல்வதா வீரம்
கண்களை பிடுங்கி எறிவதன்ரோ வீரம் ????
இப்பிறப்பில் இப்படி நான்
இருக்க அவர்கள் எனக்கிடும் பெயர்
"திமுருபிடித்தவள் "
என்ன ஒரு வீரம் ?????