உயிரில் கரையும் காதல்
கவிதை போல் வாழ
கனவு பல கண்டு
கானல் நீராய் போகும்
காதல் நானும் கொண்டேன்
கண்கள் பேசி பேசி
இதயம் திருடும் காதல்
முடிந்த கதைகள்......
முடியும் கதைகள் கோடி
உருவம் மீது வைக்கும் ஆசை
அல்ல அல்ல காதல்
உள்ளம் உருக உருக வைக்கும் ஆசை
உயிரில் கரையும் காதல்