காதலின் அர்த்தம் நம் மனதில் மாறினால்

கனவில் தொலையலாம்
கனவு தொலையவா காதல்
கவிதை களவாகலாம்
கவியை தொலைக்கவா காதல்

இயற்க்கை நாளும் மாறலாம்
இயல்பை மீறவா காதல்
செயற்கை அழகாகலாம்
செய்வதெல்லாம் சரியாகுமோ

காதலின் அர்த்தம் நம் மனதில் மாறினால்

எழுதியவர் : ருத்ரன் (11-Sep-14, 6:52 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 99

மேலே