ஞாபகம் இல்லையோ தோழியே

என் அன்பு தோழி
நீ என்னை விட்டுப் பிரிந்து
செல்வாய் என்று முன்பே தெரிந்திருந்தால்
நான் உன் இதயமாக பிறந்து
உன்னைக் காப்பாற்றியிருப்பேன் !
உன் உயிரை மட்டும் அல்ல!
நம் நட்பையும் கூட !
தோழியே நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றாலும்
நான் உன்னை முதன் முதலாய் என் கிராமத்தில் பார்த்த நாள் !
நீ என் கல்லூரிக்கு நேர்முக தேர்வுக்கு வந்த நாள்!
என் குல தெய்வ கோவிலுக்கு வந்த நாள் !
நாம் ஒன்றாய் சேர்ந்து கொம்ப்சொஸ் இல் பணி செய்த நாள்கள்!
நாம் சேர்ந்து சென்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் !
சேர்ந்து சென்று பார்த்த "கடல்" திரைப்படம் !
என் கிராமத்தில் நாம் சேர்ந்து சென்ற Tractor சவாரி !
நான், நீ மற்றும் வினோத் சேர்ந்து சென்ற தூத்துக்குடி உணவகம் !
என் கல்லூரி ஆசிரியையின் திருமண நிகழ்ச்சி !
திருச்செந்தூர் கோவில் தரிசனம் !
இறுதியாக நீயும் நானும் சந்தித்த திருநெல்வேலி சந்திப்பு!

ஆகிய அனைத்து நிகழ்வுகளும் உன்னையும் நம் நட்பையும்
என்றும் நினைவு படுத்தி கொண்டு தான் உள்ளன !!!!

கடவுள் சதிகாரன் ஏனென்றால்
நம்முள் நல்ல நட்பைக் கொடுத்த அவன்
இந்த பிரிவையும் கொடுத்துவிட்டான் !!!!!

எழுதியவர் : அருள்ராஜா (11-Sep-14, 10:29 pm)
பார்வை : 182

மேலே