கள்வனே
ஒரு நாளும்
நீ என்னை அதட்டி
பேசியதில்லை...
எப்போதுமே
என்னுடனான உன் வார்த்தைகள்
அன்பாய்..
ஆதரவாய்...
அக்கறையாய்...
அமைதியாய்...
கள்வனே.....
ஓ ! நீ முன்பே திட்டம் தீட்டி விட்டாயா?
நீ என்னை ஒருவேளை
திட்டித் தீர்த்திருந்தால்
நீ இறந்தவுடன் நான் உன்னை
மறந்துவிடுவேன் என்று பயந்த நீ
எப்போதுமே
என்னுடன்
அன்பாய்..
ஆதரவாய்...
அக்கறையாய்...
அமைதியாய்...