உன் பதில் வர தாமதம்

கனவுகள் அடுக்கி வைத்து
உன்னிடம் காண்பித்தால்
என் காதல் புரிந்திடுமா
ஏன் இன்னும் சொல் மௌனமாய்

கவிதையில் சொல்கிறேன்
தனிமையில் உளறுகிறேன்
நிழலையும் தொலைக்கிறேன்
கனவினால் எரிகிறேன்

மௌன சப்தமாய்
என் காதல் யுத்தமாய்
தினம் தினம் தொலைக்கிறேன்
இன்னுமும் தொலைத்திட
ஏதுமில்லை என்னிடம்
உன் பதில் வர தாமதம்
ஆனால் என்னாகும்
என் வாழ்க்கை மண்ணாகும்

எழுதியவர் : ருத்ரன் (13-Sep-14, 6:13 pm)
பார்வை : 63

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே