காதலும் சென்றால் திரும்பாது

காதல் ஆசைகள்தான்
மனதின் அழிவுக்கு வழி
சொல்லாத காதல் தான்
மரணத்தின் ஒரு உளி

மனதை அடகு வைத்து
காதல் வாங்கிடும் நான்
கனவினை நிஜமாக்க
கண்களை தொலைக்கின்றேன்

கானல் நீராக்கி
கனவினை மண்ணாக்கி
காதலுக்கு சவக்குழி
தோண்டும் உன் மௌனம்தான்

மறுப்பது சரிதான்
மறுப்பதும் மனம் திறப்பதும்
தாமதமின்றி உடனே சொல்
காலம் மட்டுமல்ல
காதலும் சென்றால் திரும்பாது

எழுதியவர் : ருத்ரன் (13-Sep-14, 6:30 pm)
பார்வை : 94

மேலே