துகளாய் உடைந்தது காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
துகளாய் உடைந்தது காதல்
============================
வாளைப் போல கூர்மையாய்
*** வளைந்து மின்னும் இமைகள்
கார்மேகம் தொலைத்த கருமையை
*** ஒளித்து வைக்கும் கூந்தல்
புதிய வழியில் புன்னகை மொழி
*** பூக்கள் கேட்கும் உன் அசைவு
மனதை இழுக்கும் நெற்றிப் பொட்டு
*** எதனை ரசிப்பேன் உனை விட்டு
காற்றில் பறந்தது என்கண்கள்
*** நாற்றாய் வளர்ந்தது என்காதல்
இறைவன் செய்த இழுப்பறியால்
** துகளாய் உடைந்தது இக்காதல்
- இராஜ்குமார்
நாள் : 30 - 5- 2011