பாரதியார்
![](https://eluthu.com/images/loading.gif)
அக்கினி குஞ்சு கக்கிய நெஞ்சு
ஆத்திச் சூடியின் வார்த்தை தொனி
இதந்தரு மின்ப சுதந்திரப் பள்ளு
ஈழத்தை இணைத்த பாலக் கவி
உயிரை உருக்கும் குயிலின் பாட்டு
ஊருக்கு கோணங்கி பாருக்கு மகாகவி
எட்டுத் திக்கும் கொட்டும் முரசு
ஏறுபோல் நடவெனும் வீறு கொள் பாரதம்
ஐந்துக்கு மேல்வந்த சிந்துக்கு தந்தை
ஒளிபடைத்த கண் களிபடைத்த பண்
ஓடி விளையாட பாடிய பாரதி
அவ்வையாரே பாரதியராம்