விலகாத வரம் வேண்டும்
விலகியோடும் எண்ணங்களை
பற்றியோடும் மனது
தூரம்போகும் உறவுகளை
துரத்திப்போகும் இதயம்
விலகநினைக்காத சொந்தங்களை
விலகிடாத உள்ளம்
மனதில்நிற்கும் நிகழ்வுகளில்
மனதைக்கரைக்கும் நிமிடம்
துரத்திடும் துன்பத்திலும்
கைகோர்க்கும் நட்பு
துடித்திடும் உள்ளத்தை
அணைத்திடும் அன்பு
வாழ்வின் இறுதிவரை
வேண்டுமிவை பிரியாமல்
வாழ்வை சுகமாக்க!
வசந்தத்தை எனதாக்க!

