அம்மா
அம்மா என்னும் மந்திரத்தை
அனுதினம் சொல்லி தவம்செய்து
அம்மா வான கோமாதா
அன்பால் பாலைப் பொழிகின்றாய்
உம்மேல் கோடி தெய்வங்கள்
உறையச் செய்யும் உன்சொல்லே
அம்மா என்னும் ஒருசொல்லில்
அத்தனை வலிமை அம்மம்மா
*******************************************************
பசு அம்மா என்ற ஒருசொல்லை சொல்லியே
அனைத்து தெய்வங்களையும் தன் மேனியில் காட்டுகின்றது
அவ்வாறாயின் அம்மா வின் அன்பை என்சொல்ல ....