கணவனின் கல்லறையில்
காதல் கானம்
காதுகளில்
சேர்ந்து இரசித்தோம்
நீயும்.......
நானும்.......
மஞ்சள் தாலி
கழுத்தில்
காவியம் படைத்தோம்
நீயும்.......
நானும்.......
ஒற்றைப்போர்வை
தேகத்தில்
தொலைந்ததை தேடினோம்
நீயும்.......
நானும்.......
செல்ல சண்டைகள்
இடையில்
ஊடல் கண்டோம்
நீயும்.......
நானும்.......
மல்லிப்பூச்ச்சரம்
தலையில்
கூடல் கொண்டோம்
நீயும்.......
நானும்.......
பிஞ்சுப்பிரபஞ்சம்
வயிற்றில்
இன்பத்தில் திளைத்தோம்
நீயும்.......
நானும்.......
மழைத்துளிகள்
நிலத்தில்
கீழ்விழாமல் தட்டிக்கொடுத்தோம்
நீயும்.......
நானும்.......
பிரளயம் அரங்கேறியது
ஆழியில்
செத்துப்பிழைத்தேன்
நான் மட்டும்.....
உறையும் நிமிடம்
என் மனதில்
நித்திரையில் நீ.....
புற்தரையில் நான்.....
கருவறையில் உன் எச்சம்...!!!