இயற்கை தரும் பாடம்
இயற்கை பாடம்
அழகான மலரினிடம் புன்னகையை கற்றுக்கொள்.
ஆர்பரிக்கும் அருவியிடம் சக்திதனை கற்றுக்கொள்
இரைச்சலிடும் ஆழியிடம் சிந்தனை ஆழத்தை கற்றுக்கொள்
ஈர்க்கும் எறும்பினிடம் சேமிப்பை கற்றுக்கொள்
உந்தி விழும் அலையினிடம் ஊக்கத்தை கற்றுக்கொள்
ஊர்ந்து செல்லும் மேகத்திடம் அன்பளிப்பை கற்றுக்கொள்
எம்பி நிற்கும் மரத்தினிடம் ஈகையை நீ கற்றுக்கொள்
ஏறி விழும் நதியினிடம் விடா முயற்சி தனை கற்றுக்கொள்
ஓன்று பட்ட பூமியிடம் பொறுமையை நீ கற்றுக்கொள்
ஓங்கி நிற்கும் மலையினிடம் உயர்வு தனை கற்றுக்கொள்
ஔ விதமே பாறையிடம் உறுதியினை கற்றுக்கொள் -மன அழுக்கை
0
0 0 கணமே கரைத்து விட மழையிடம் நீ கற்றுக்கொள்.
நெல்லை கவி தில்லை