நீ இன்றி நான்

நீ ஏறெடுத்து பார்த்ததென்றோ ஒருமுறை....
என் தனிமைக்கு அன்றிலிருந்து விடுமுறை....

இந்த காதல் வருவதற்கு ஏதுடி விதிமுறை....
அதை சொல்வதற்கு தான் பற்பல செய்முறை....

மென்மையே ஏன் இந்த இதய - வன்முறை....
என் உயிரை கழற்றி மாட்டுகிறாய் பன்முறை....

ஈகோ மலரே மணங்கள் மட்டும் எதிர்மறை....
எழுதிவிடு நம் பிரிவிற்கெல்லாம் ஒரு முடிவுரை....

முடித்துவிடு என்னுள் நீ புரியும் அடக்குமுறை....
இணைந்து செல்வோம் கடந்து பல வரையறை.....

விருட்சமென தழைத்தோங்க நம் தலைமுறை....
ஈர விழி கொண்டு காத்திருப்பேன் நீ வரும்வரை...!!

எழுதியவர் : முரா கணபதி (15-Sep-14, 8:01 pm)
Tanglish : nee indri naan
பார்வை : 201

மேலே