பாதை தெரியும் பார்
![](https://eluthu.com/images/loading.gif)
பாதை தெரியும் பார்.............
உழைப்புக் கேற்ற ஊதிய மில்லை
பிழைப்பவர் வாழ்வில் பெரிதும் கவலை
நமக்கிக் கதி ஏன் என்பவர்க்கு
தெளியும் வழி இது
செய்யும் தொழிலில் சிறுமை இல்லை
செய்வது எதுவும் சிறப்புற செய்வாய்
எத்தொழி லாயினும் சிறந்தவன் என
முத்தாய் முதலாய் வருவாய்
சொல்வதும் செய்வதும் ஒன்றே கொள்
சொல்லில் நினைவில் தவிர்ப்பாய் பொய்
நேரம் தவறாமை மனதில் வை
காலம் கைக்கூடும் மெய்
மனதில் உறுதி கொள்வாய் கால
மாயக் கண்ணாடி திறக்கும் நீ
சுணங்கி யிருந்தால் யார் உனக்கு
துணை வருவார் இங்கு
நம்மை நாடி வாய்ப்பு வராது
நாம் தான் தேடி செல்வோம்
ஒன்றும் இல்லா கேசத்திற்கே இங்கு
என்றும் இல்லா விளம்பரம் பார்
உன்னை நீ முழுதும் அறிவாய்
பின்னர் பிறர் உணர முயல்வாய்
ஈட்டிய திறமைகள் யாவும் இங்கு
பூட்டியே வைத்தால் விற்காது
உழைப்பு முயற்சி தன் நம்பிக்கை
பிழைப்பை உயர்த்த பெரும் துணை
அதிர்ஷ்டம் வருமென நம்பாதே கண்திர
பாதை தெரியும் பார்
முரளி