அம்மா, அம்மா, அம்மா, என் அம்மா

“ உன் வயிற்றில் நான் ...

“ ஒரு கொடியில் உணவாம் ...

“ இரு விழியில் உறக்கமாம்....

“ என் துடிப்பை நீ அறிவாயாம் ....

“ உன் தவிப்பை நான் உணர்ந்தேனாம்....

“ பூமியில் நான் பிறந்தவுடன்

“ தாயும், சேயும் வேறு வேறாக...

“ உன் உயிரையே என்னுடன் பங்கிட்டு,

“ ஒருயிராய் இருந்து..

“ ஈருயிராய் ஈன்ற பின்னும்...

“ கடமை தீர்ந்தென்று கை விரிக்காமல்..

“ உதிரத்தை உருக்கி உயிர்ப்பால் கொடுத்து...

“ அம்மா, அம்மா, அம்மா, என் அம்மா....

“ உனக்கு ஈடு ஈரேழு உலகிலும் இல்லையம்மா!!!

எழுதியவர் : (18-Sep-14, 11:50 pm)
பார்வை : 161

மேலே