இரைறக்குழந்தை
இரு உயிர் இணைந்தே
நான் உருவானேன்...........
பிறந்ததும் குதுகலிக்கும்
தொட்டில்கள் இல்லை
குப்பைத் தொட்டியே என்
முதல் தொட்டில்..............
நான்க் கேட்ட முதல் தாலாட்டு
இரு நாய்களின் உணவுச்சண்டையில்
எழுந்த ஒளி.............
அடித்து கொண்ட நாய்கள்
கூட என் அழுகை கேட்டு
தடவி கொடுத்தது
அதுவே எனக்கு தாயின்
முதல் அரவணைப்பு........
அழுது அழுது தொண்டை
வரண்டபோது வருணன்
இரக்கபட்டு பொழிந்த மழைத்துளி
என் முதல் தாய்ப்பால்.............
திரண்ட கூட்டத்தில் ஓர் கரம்
கட்டி அணைத்து துணி போர்த்தியது
நான் கண்ட முதல் மனிதம்............
வளர்ந்தேன் கொஞ்சம் கொஞ்சமாய்
எழுத்துக்கூட்டி படிக்க முயல்கையின்
நான் படித்த முதல் சொல்
என் வீட்டின் மேல்
எழுதி இருந்த
அனாதை இல்லம்........
பொருள் தெரிந்த
போது தான் சொன்னார்கள்
நான் குப்பையில் இருந்து
பொறுக்கப்பட்டவன் என.........
இறைக்குழந்தை என முலாம்
பூசிய அனாதை
நான். ..............