சொல்லாத சோகம் -காதல்

என் காதலோ சொல்லாதது
என் கண்ணில் பட்ட அவள் முகம் மட்டும்
சொல்லிக்கொண்டே போகிறது
அவள் தேவதை என்று........
நிழலாக அவள் செல்ல... .........-அதனை மறைக்கும்
வெயிலாக நான் செல்ல..............-ஆசை தான்
என் காதல் தான்-சொல்லாத
காதல் ஆயிற்றே ..........
சிரிக்கும் நிலவாக அவள் மட்டும்
சிந்தனையில் நான் -அவளுடன்
சிரித்துக்கொண்டே கற்பனையாக ......
பாதி இரவில் பயணிக்கிறேன் -அவள்
நினைவோடு -
பாதித் தூக்கத்தில் நான்
பார்வை மட்டும் அவள் மேலே ........பாவம்
ஓய்வு கொடுக்காததால்
திட்டித் தீர்க்கிறது -என்னை
என் கண்கள் .......
என்ன பாவம் செய்தேனோ --என்
விழியில் பட்ட அவளை
பார்க்க மட்டும் முடிகிறது -அவளிடம்
பேச ஏனோ வாய்ப்பு கிடைக்கவில்லை
சோகம் தான் --பிரிவு என்ன நீண்ட காலமா?
இதோ அவள் முகம்
என் கண் முன்னே ........
நீங்காத நினைவாக .........
நிலவு அழகு தான் --அதோ
முந்திவிட்டது --அவள்
முகச்சாயல் முதன் முறையாக ..........
தட்டிப்பரித்துவிட்டது முதல் இடத்தை
நிலவிடமிருந்து --------
தேவதைப் பட்டத்தை .........
சேதி அறிந்து
தேவதைக் கூட்டமெல்லாம்
வந்து வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.........
பாவம் ........நிலவுக்கு தான் சோகம் ............
செந்நிற மேனியில் அவள் முகம்--
செதுக்காத சிற்பமாக .............
திருடிவிட்டாள்--என் இதயத்தை
திருப்பிக் கொடுக்காதவளாக...............
வீதியெங்கும் அவள் வாசனை
எனக்கு மட்டும் -------
விடிய விடிய அவள் யோசனை ........
மாலை நேர சூரியனும்
மயங்கி மறைகிறது
அவள் வரவில் .........
நான் சேர்க்காத செல்வம் இல்லை
அவள் புன்னகையைத் தவிர ..........
படிக்காத பாடம் இல்லை
அவள் மனதைத் தவிர ...........
அன்று தான் கண்டு பிடித்தேன் அவள் உயிரை ........
அறிந்து கொள்ள ஆவலா ........
அதான் ......... அதுதான் ...........
அவள் கருவிழிகளில் பார்த்த என் முகம் ........
செதுக்காத சிலையும் அவள் ........
பாடாத கவியும் அவள் ...........
எழுதாத எழுத்தும் அவள் ...............
பூக்காத மலரும் அவள் ..........
காய்க்காத கனியும் அவள் .............
பொழியாத மழையும் அவள் ..............
வற்றாத நதியும் அவள் ..............
காணாத காட்சியும் அவள் .........
வடிக்காத கலையும் அவள் ..............
பேசாத மொழியும் அவள் .............
அவள் முகத்தில் தெரிகிறது --
வானவில்லின் அழகிய தோற்றம் ...........
அவள் இதழ் ஓசை இனிமை தான் ........
--------------------ஆனால்
எவர்க்கும் இன்னல் இளைத்ததன்று.........
என் காதல்-----------
பேசாத காதல் தான் ......
------------ஆனால்
பேச வேண்டிய காதல்...........!

எழுதியவர் : ஜேம்ஸ் (20-Sep-14, 4:28 pm)
பார்வை : 527

மேலே