நட்பு

இரத்த பந்தம் இல்லாதது
மொத்த சொந்தத்தையும் நமக்கு தருவது
இங்கு அர்த்தமற்ற வார்த்தை வரும்
ஆடம்பரமற்ற பேச்சு வரும்
குட்டி குட்டி ஊடல் வரும்
பின்பு குட்டி குட்டி கூடல் வரும்
துன்பமென வந்துவிட்டால்
துக்கமதை பகிர்ந்திடும்
இன்பமென வந்துவிட்டால்
இனிதென கலந்திடும்
விரட்டி விரட்டி சண்டையிட்டால்
விட்டு கொடுத்து போய்விடும்
விலகி நாமும் போய்விட்டால்
விரட்டி வந்து அணைத்திடும்

THAT IS FRIENDSHIP ..........................................

எழுதியவர் : அஞ்சலி (20-Sep-14, 5:57 pm)
சேர்த்தது : அஞ்சலி
Tanglish : natpu
பார்வை : 212

மேலே