தொலைந்தேன்

உன் உருவம் கண்டு
என் இதயத்தை தொலைத்தேன்.....
உன் விழியை கண்டு
என் பார்வையை தொலைத்தேன்.....
உன்னுடன் பேசி
என் மௌனத்தை தொலைத்தேன்.....
உன்னுடன் நடந்து
என் பாதையை தொலைத்தேன்.....
உன்னுடன் கதைகள் பேசி
என் பயணத்தை தொலைத்தேன்.....
உன் நினைவுகளால்
என் கனவுகளை தொலைத்தேன்.....
உன்னையே கனவில் கண்டதால்
என் உறக்கத்தை தொலைத்தேன்.....
உன் இன்ப வார்த்தையால்
என் துன்பத்தை தொலைத்தேன்.....
உன் சிரிப்பால்
என் அழுகையை தொலைத்தேன்.....
உன் அன்பால்
என் ஏக்கத்தை தொலைத்தேன்.....
உன் அரவணைப்பால்
என் சுமைகளை தொலைத்தேன்.....
உன் கனிவால்
என் பிணிகளை தொலைத்தேன்.....
உன் பணிவால்
என் தனிமைகளை தொலைத்தேன்.....
உன் துணிவால்
என் அச்சத்தை தொலைத்தேன்.....
உன் நேசத்தால்
என் வேஷத்தை தொலைத்தேன்.....
உன் ஈகையால்
என் பிடிவாதத்தை தொலைத்தேன்.....
உன் மௌனத்தால்
என் வார்த்தைகளை தொலைத்தேன்.....
உன் அறிவால்
என் மடமையை தொலைத்தேன்.....
உன் அழகால்
என் அலங்காரங்களை தொலைத்தேன்.....
உன் வரவால்
என் இரவுகளை தொலைத்தேன்.....
உன் ஜனனத்தால்
என் மரணத்தை தொலைத்தேன்.....
உன் துணையால்
என் வேதனையை தொலைத்தேன்.....
நீ என்மீது கொண்ட இஷ்டத்தால்
என் கஷ்டத்தை தொலைத்தேன்.....
உன் தயவால்
என் பயத்தை தொலைத்தேன்.....
உன் அக்கறையால்
என் பிடிவாதத்தை தொலைத்தேன்.....
உன் அருகில்
என் நேரத்தை தொலைத்தேன்.....
உன் சுறுசுறுப்பில்
என் சோம்பலை தொலைத்தேன்.....
உன் தீண்டலில்
என் வெட்கத்தை தொலைத்தேன்.....
உன் கூடலால்
என் ஊடலை தொலைத்தேன்.....

இனி என்னிடம்
தொலைப்பதற்கு
எதுவுமில்லை
என்னை உன்னில்
தொலைப்பதை
தவிர.......!!!

எழுதியவர் : ம.கலையரசி (21-Sep-14, 12:43 pm)
Tanglish : tholanthen
பார்வை : 235

மேலே