எனக்கு ஒரு காதலி இருக்கின்றாள்

என்னுடைய
கற்பனைக்குதிரைக்கு
கடிவாளம் இட்டாள் - என்
காதலி ....!
என் துன்பங்களை மறக்கடித்தாள்
இன்பங்களை தனக்குள்ளே எடுத்துக்கொண்டாள்
கற்பனைகள் - அது
அவள் என்னுடன் இல்லாத நேரத்தில்தான்
அதுகும் அவளைப்பற்றித்தான்.!
காதலிக்கமுடிகிறது ஆனால்
கவிதை எழுதமுடிவதில்லை
காரணம் !!!...
மனதில் நின்றகவிதை இன்று
மனித வடிவில் என்னுடன்...!