ஆற்றலும் அழிவும்

ஆற்றலும் அழிவும்

அந்நியர் நம் நாடு வந்து நமை
ஆண்டு சென்றது அக்காலம்!
அந்நியரின் நாடு சென்று நமை
ஆளச் சொல்வது இக்காலம்!
வேர்களை இங்கு விட்டு
விழுதுகளை தொங்க விட்டு
பார் முழுதும் பறக்கின்றார்
இந்நாட்டில் பட்டம் பெற்றோர்!
அவர்க்கு நீர் வார்க்கும் வகையொழிந்து
அமில மோர் பார்க்கும் நிலை அழித்து
ஆற்றல் பலவினையும் அவர் தந்து
ஆக்குகிறார் அந்நியரை வல்லரசாய்!
ஏற்ற மிகு எங்களது இளைஞர்களை
தமையீன்ற பாரதத்தாய் முகம் மறக்கச்
செய்கின்ற மானிடரே!
மாபெரும் உன்னதத்தை உமக்கு பெற்று
ஆற்றல் கொண்ட திரு நாட்டை அழிக்கின்றீர்!
கேடு கெட்ட கட்டமைப்பை நல்குகின்றீர்!
உங்கள் வீடும் அது கெட்ட பின்னாலே
உணர்வீரோ நீருமிந்த இவ்வுண்மைதனை?

எழுதியவர் : karuna (22-Sep-14, 1:59 pm)
பார்வை : 268

மேலே