அன்பே சிவம்
கண்ணே..மணியே..
என்றேன்..
"என்னாச்சுங்க உங்களுக்கு" என்றாய்!
கவிதை பாட ஆரம்பித்தேன் என்றேன்!
வேண்டாம்..ஏதாவது கதை சொல்லுங்கள் என்றாய்..!
உன்னை தொட்ட கதையா..
அல்லது உன்னை தொடர்ந்த கதையா?
எது வேண்டும் முதலில் என்றேன்!
பேய்க் கதை வேண்டுமென்றாய்!
முதலில் எனக்கு புரியவில்லை..
உன்னை மணம் முடித்து
முப்பது நாள் கழித்து
புரிகிறது..அர்த்தம்!
குழந்தையாய் உன் நெஞ்சம் ..
இனி எப்பொழுதும்
உனக்கே நான் சொந்தம்!
(வாழ்க தமிழ்! ..
அன்பே சிவம்!)