மின்னல்

தாகமாக இருக்கிறது
என்று சொன்ன போது
தண்ணீருடன் உன்
கை படுதலும் கொண்டேன்!
நீ வரும் சாலையின்
எதிர் புறம் இருந்து வந்து
ஒரு நொடியே எனை நீ
பார்க்கின்ற பரவசத்தில்
தூரங்கள் தெரிவதில்லை!
பாரங்கள் புரிவதில்லை!
விலகி நீ போனபின்னே
திரும்ப உன்னை நோக்கும் வரை..
உலகமே தெரிவதில்லை!
உன் புன்னகை மின்னலதில்
பூவுலகே பகல் ஆனதால்
ஓடி வந்தேன் உனைத் தேடி!
என் குளிர் மேகமே..
நகர்ந்து நீ சென்ற இடம் அறியும் வரை
அலைந்திருப்பேன் ஆயுள் வரை!

எழுதியவர் : karuna (22-Sep-14, 5:34 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : minnal
பார்வை : 161

மேலே