ஒரு கவிஞனின் கவியில்-வித்யா

ஒரு கவிஞனின் கவியில்...!-வித்யா

வெண் புரவிகளோடும்
ஓர் பந்தய நாளொன்றில்
கவியை பணையம் வைத்து
நீ ஓடியது நினைவில்லையா......?

சென்பகக்காடுகளில்
எனைப் பதுக்கி
புது வாசனைத்
தேடியது நினைவில்லையா....?

மெல்லிதழ் விரியும்
ஓசைகேட்க சிறுபுன்னகை
கடனாய் கேட்டது
நினைவில்லையா.....?

இளஞ்சூட்டில்
முகம் கழுவி
பனிக்காற்றில்
கைகோர்த்தது
நினைவில்லையா.....?

உன் நேசம்
உண்மையெனில்
உன் கவிதைக்குள்
எங்கேனும் எனை
மறந்து வைத்திருப்பாய்......

இல்லையேல்......
உன் கவிக்கும்
உனக்கும் ஞாபக
மறதியாய் இருக்கவேண்டும்.....!!

எழுதியவர் : வித்யா (22-Sep-14, 9:45 pm)
பார்வை : 602

மேலே