ஒற்றை

பொறுமை இழந்துவிட்டேன்,
உனக்காக காத்திருந்து,
எத்தனை எத்தனை வருடங்கள்,
என்னும் எத்தனை எத்தனை நாட்கள்?
இனியும் எவ்வளவு காலம்,
உயிரை உடல் தாங்குமென்று தெரியாது,
அப்படி ஒருகால் நீ வந்தால்,
வரும்போது நான் இல்லையென்றால்,
விசாரிக்காமல் வந்துவிடு,
ஊருக்கு கடைசியில் உள்ள சுடுகாட்டுக்கு,
ஒற்றை சமாதியில் ஒய்யாரமாய் அமர்ந்திருப்பேன்,
கட்டழகி உனைக்கான காதல் மனசுடன் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (22-Sep-14, 9:02 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : otrai
பார்வை : 73

மேலே