புதிய காதல்

வலைத் தளத்தில்
பின் முக நூலில்
உன் முகம் காட்டா
உயிர் எழுத்துகளில்
நான் என் வசம் இழந்தது
உண்மைதான்!
அசட்டுப் பெண்ணே
வா பீச்சுக்கு
என்று நீ அழைத்த போது
நான் ஆசை பட்டதென்னவோ
உண்மைதான்..!
ஆனால் நேரில் எனை
பார்த்த பின்பு
என்ன சொல்வாய் தெரியவில்லை!
ஏனென்றால் உண்மையில் நான்
பெண்ணே இல்லை!
விளையாட்டுக்கு மாற்றினேன்
என் பேரை..! பெண் பேராய்!
இன்று தொலையும் நீ
என்று கிடைப்பாய்?

எழுதியவர் : karuna (23-Sep-14, 9:31 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : puthiya kaadhal
பார்வை : 331

மேலே